பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்!

பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்!

பிரபல நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவர் அழகி ,தென்றல்,தாண்டவகோனே என்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இவரின் வயது (65). தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு முடிவடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

எனினும் நீண்ட நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.தற்போது இவருடைய உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிகாகாக வைக்கப்பட்டுள்ளது.அருள்மணி மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் இவருடைய உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Related post