பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடி அரசு பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் இருந்த மக்களிடையே மோடி அவர்கள் உரையாடத் தொடங்கிய போது”அங்கிருந்த இந்தியர்கள்’ பாரத் மாதா கி ஜே ‘என முழக்க விட்டனர். இதைக் கேட்ட பிரதமர் தனது தாய் மண்ணில் இருப்பது போல மனம் நெகிழ்கிறது! என்றார்,இங்கு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது என்றார். அதன்பின்பு பருவநிலை மாற்றம், தீவிரவாதம் அல்லது தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும் உலகம் இந்தியாவை உற்று நோக்கி பார்க்கிறது என்றார்.
எந்த ஒரு சந்தர்ப்பமும் இந்தியா நழுவ விடாது ஒவ்வொரு நேரத்தையும் வீணாக்க விடமாட்டோம் என இந்தியா தீர்மானித்துள்ளது. மேலும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் நோக்கத்தில் செயல்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றார். இது இந்தியாவிற்கு பெருமை எனத் தெரிவித்தார்.