பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.இதனால் 22 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்தினால்
2024- 25 முதல் 2030 -31 வரையிலான காலகட்டத்திற்கான ரூபாய் 3600 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி பிரதமர் வித்யாலஷ்மி திட்டத்தின் கீழ் 75% மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் ரூபாய் 7.50 லட்சம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருவாய், 8 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்,10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால், 3 சதவீத வட்டி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள்
பி எம் வித்யாலட்சுமி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.