ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்காக அபார் கார்டு வழங்கும் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளியில் சேரும்போதே (APAAR CARD) எண் வழங்கப்பட்டு உயர்கல்வியை மேற்கொள்ளும் வரை பயன்படுத்தப்படுகிறது.
இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட போலி சான்றிதழ்கள் , முக்கிய ஆவணங்கள் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன. மாணவர்கள் கல்வி படிப்பை ,கல்லூரி படிப்பை முடித்தவுடன் நிறுவனத்திற்கு சேர்வதற்கு உரிய தரவுகளைப் பெறுவதற்காக அபார் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கும் தனது கருத்தினைத் தெரிவிக்கும் படி சுற்றறிக்கை ஒன்றினை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.