ீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பட்டாசு குப்பைகளைச் சேகரித்து தூய்மை பணியாளரிடம் தனியாக தர வேண்டும் என்று வேண்டுகோளினை சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நேற்றைய தினம் பட்டாசு குப்பைகளை அகற்றுதல், மற்றும் தீ விபத்து தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை மேயர் ,மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் வெடிக்கும் பட்டாசு குப்பைகளை மற்ற குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாக ஒரு பைகளில் சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பட்டாசு குப்பைகளைச்சேகரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.