நுகர்வோர் தீர்ப்பாயம் – கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடைகளில் அபராதம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவுளி கடை ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர் (கன்ஸ்யூமரிடம்) புகார் செய்துள்ளார். இதன் காரணமாக விசாரணை செய்த போது எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலை 1 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு ரூபாய் அதிகம் விற்பனை செய்த ஜவுளி கடைக்கு ரூபாய் 1 லட்சம் நஷ்டயீடு நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே கூடுதல் விலை ஒரு ரூபாய் அதிகமாக இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகபட்சமாக கூடுதல் விலையை விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் கேள்வியை எழுப்ப வேண்டும் இல்லாவிடில் வழக்கு தொடர வேண்டும் என்ற நுகர்வோர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.