சென்னை தலைமை செயலகத்தில் நீலகரி வரையாடு திட்டத்தினை (12.10.2023) இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் அழிந்து வரும் வனவிலங்குகளின் இனத்தை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடத்தை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 25. 14 கோடி மதிப்பீட்டில் நீலகிரி வரையாடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் ஒவ்வொரு வருடமும் ‘அக்டோபர் 7’ஆம் தேதி வரையாடு தினம் என்று கொண்டாடப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மேலும் பள்ளி மாணவர்களுக்காக நீலகிரி வரையாடு பற்றிய புத்தகங்களை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.