நீர் மூழ்கி குண்டுவெடிப்பு சோதனையில் இந்திய கடற்படை சாதனை படைப்பு! நீர் மூழ்கி குண்டு வெடிப்பு பரிசோதனை மேற்கொண்டு இந்தியா கடற்படை சாதனை படைத்துள்ளது . மத்திய அரசின் தற்சார்பு கொள்கை அடிப்படையில் புது டெல்லி உள்நாட்டிலேயே டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுவெடிப்பு தயாரிக்கப்பட்டது. போரின்போது எதிர் நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்காக டார்பிடோ நீர் மூழ்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை,ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே டார்பிடோ நீர்மூழ்கி குண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டார்பிடோ நீர்மூழ்கி குண்டு வெடிப்பு பரிசோதனையை (ஜூன்6) செவ்வாய் கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த டார்பிடோ நீர் மூழ்கி குண்டு வெடிப்பு குழாய் வடிவமைப்புடன் நீருக்கடியில் ஏவப்படும் வகையில் அமைந்துள்ளது. இந்த நீர் மூழ்கி குண்டு வெடிப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நீருக்கடியில் ஏவப்பட்டு துல்லியமாக தாக்கியது. இந்த குண்டுவெடிப்பு சோதனை மேற்கொண்டதில் இந்திய கடற்படை டி .ஆர்.டி.ஒ (பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்) வெற்றி பெற்றுள்ளது. இந்தியா வரலாற்றில் மைக் கல்லை எட்டி இந்திய கடற்படை சாதனை படைத்துள்ளது.