நிபா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நிபா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

     கேரளாவில் நிபா வைரஸ் என்ற தொற்று  நோய் அதிகளவில் பரவி வருகிறது . இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு எல்லை பகுதியான கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்  கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு  நுழைய தடை  விதிக்க வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவிலிருந்து  பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு  வருபவரை தீவிரமாக கண்காணித்து காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

Related post

கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக தீவிர நடவடிக்கை!

கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக தீவிர நடவடிக்கை!

கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 1916 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 வருடம் ஜனவரி மாதம்…
கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தில் கேரளா நாள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி இன்று கேரள பிறவி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் நிகழ்ச்சி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல்…
நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

வாட்டர் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்தினைப் பிரதமர் மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார். கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையைக் கொடி அசைத்து கேரளா…