நான் முதல்வன் திட்டத்தில் யு பி எஸ் சி தேர்வு எழுதி தமிழக மாணவன் பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். புற்றுநோயால் தந்தையை இழந்த பிரசாந்த் நான் முதல்வன் திட்டம் தாயுமானவர் திட்டமாக உதவியாக இருந்தது என்று செய்தியாளரிடம் தெரிவித்தார். பிரசாந்த் யு பி எஸ் சி தேர்வில் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்திலும் ,இந்தியளவில் 78ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந் நிலையில் ” நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மட்டுமல்ல” அனைத்து இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம்’ என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் முதல்வன் திட்டத்தில் மூலம் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் இதற்குச் சான்று! என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்