நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டு தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டு தொடரில்  குடியரசு தலைவர் திரௌபதி  உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் (ஜனவரி 31 )இன்று தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் முதலில் தலைவர் திரௌபதி முர்மு ” ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதே இலக்கு என்று உரையாற்றி தொடங்கினார். பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 30 ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் .அதன் பிறகு ஜி-20 மாநாட்டை இந்தியாவே தலைமை ஏற்று நடத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பலவித உன்னத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார். சந்திரியான்-3 திட்டத்தின் மூலம் நிலவில் பாரத கொடி பறந்து கொண்டிருக்கிறது என்றும், ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்திலும் மத்திய அரசு அமைக்க அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து வங்கி துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. தற்போது இந்தியாவில் 39 வந்தே பாரத் ரயில்கள், 20 நகரங்களில் மெட்ரோ இயங்கி வருகின்றன. மேலும் 4 லட்சம் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மத்திய அரசு வழங்குகிறது. உலகில் இந்தியா டிஜிட்டல் அளவில் பணப்பரிவர்த்தனை முறையில் இந்தியா 46 % வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா பெருமளவு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ,தெரிவித்தார். இந்தியாவின் பல நூற்றாண்டு கனவான அயோத்தி ராமர் கோயில் திறப்பு நினைவாகியுள்ளதாக தெரிவித்தார்.கடந்த ஆறு மாதங்களாக இந்தியா பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து வருவதாகவும், உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-ஆவது மிகப்பெரிய நாடாக முன்னேற்றமடைந்துதாக பெருமிதத்தோடு உரையாற்றினார்.

 

Related post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன்…

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர்…