நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் திருவிழா கொண்டாட்டம் !

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் திருவிழா கொண்டாட்டம் !

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாதா பிறந்த நாளை முன்னிட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் 2024 (ஆகஸ்ட் 28) இன்று கொடியேற்றுத்துடன் வேளாங்கண்ணி திருவிழா துவங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8-ஆம் தேதி வரை விழா நடைபெறும்.

இக்கோயிலில் பத்து நாட்களும் சிறப்பு திருப்பலி, தேர் பவனி நடைபெறும். பெரிய தேர் பவனி செப்டம்பர் 7ஆம் தேதியும் ,மாதா பிறந்தநாள் செப்டம்பர் 8 -ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் சார்பாக செய்யப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி திருவிழாவைக் காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.

Related post