நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை அருண்குமார் இயக்குகிறார். நடிகர் விக்ரமுடன் ‘தூஷரா விஜயன் ,எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையில் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் காட்சிகள் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர தீர சூரன் திரைப்படத்தில் வில்லேஜ் நாயகனாக ஆக்சன் தெறிக்க விடும் ஆக்சன் காட்சிகளில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.வருகிற 2025 ஜனவரி மாதம் ‘வீர தீர சூரன்” திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.