நடிகர் பிரபு தேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பேட்ட ரா ப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தை எஸ்.ஜே சீனு இயக்கியுள்ளார் .இத் திரைப்படத்தின் இசையினை டி இமான் இசையமைத்துள்ளார். நடிகர்பிரபுதேவா, உடன் வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று ட்ரெய்லர்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந் நிலையில் பேட்ட ராப் திரைப்படம் செப்டம்பர் 27 இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. எனவே பிரபு தேவா ரசிக
பெருமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.