நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வாடிவாசல் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. வாடிவாசல் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு வீரர்களுடன் மல்லுக்கட்டும் காட்சி எடுக்கப்பட்டது. அதன் பின்னர் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது (ஜூன் 25) நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றி அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளார்.

‘விடுதலை 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படம் தொடங்கப்படும் என வெற்றிமாறன் தெரிவித்தார். “இதைத்தொடர்ந்து ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எனவே வாடிவாசல் படத்திற்காக ரோபோ காளை லண்டனில் அணிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது என்ற தகவலை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.இந்த வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றி அப்டேட் வெற்றிமாறன் தெரிவித்ததில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
