தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 26 ஆம் தேதி உடல் நலக்குறைவால் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார் . இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் நுரையீரல் அழற்சி காரணமாக( டிசம்பர் 28.2023 ) இன்றைய தினம் காலை உயிரிழந்தார் .
தே மு தி க தலைவர் விஜயகாந்த் சினிமா துறையில் வெற்றி பெற்றவர். இவர் 2006 முதல் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம் ‘என்ற கட்சியைத் தொடங்கினார் .இதன் மூலம் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் , 2011 முதல் 2016 வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். இவருடைய பிறந்தநாள் ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக நிர்வாகிகள் , தொண்டர்கள் விஜயகாந்த அவர்களை பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் இறுதி மறைவிற்கு கண்டு ஆழ்ந்த வருத்தங்களுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,அரசியல் தலைவர்கள் , முக்கிய திரை பிரபலங்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.