தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணியானது மேட்டூர் அணைக்கடுத்தபடியான மிக உயரமான பிரம்மாண்ட அணையாகும். பெரியகுளம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது சோத்துப்பாறை அணையில் இன்று முதல் 136 நாட்களுக்கு தண்ணீரை திறக்கிறது. தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு சோத்துப்பாறை அணையின் கொள்முதல் அளவைத் தாண்டி திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டு தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திவுள்ளார்.

மேலும் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பால் 2865 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெற்று பயனடையுபம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related post

தேனி மாவட்டத்தின் பெருங்குளப்பகுதியில் கூடைப்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது!

தேனி மாவட்டத்தின் பெருங்குளப்பகுதியில் கூடைப்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மே 12 ஆம் தேதி முதல் மூன்று…
தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் ‘சின்ன குற்றாலம்’ என்று அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில்…