தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆண்களைப் போலவே பெண்களுக்கான கல்வியறிவு, சம உரிமை பற்றி வலியுறுத்தப்படுகிறது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம், வன்கொடுமைகளைப் பற்றிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் திறமை வாய்ந்த பெண்களை அங்கீகரிக்கிறோம் என்றும், ஒவ்வொரு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்து நமது பாரதப் பிரதமர் மோடி தேசிய பெண் குழந்தை தினத்திற்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.