தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி!

தேசிய சீனியர் கால்பந்து போட்டியில்  தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி!

தேசிய சீனியர் கால்பந்து போட்டியில்  தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி! 27 ஆவது தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஸ் தொடர்  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது. இது 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தத் தொடரில் இறுதிப்போட்டி தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகளுக்கிடையே நடைபெற்றது. தமிழ்நாட்டு அணியானது ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.  தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாட்டு அணியின் வீராங்கனைகள் துர்கா, பிரியதர்ஷினி, இந்துமதி, கோல் அடித்து அசத்தலாக  விளையாடினர். கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டு அணி முதல்வதாக வெற்றி பெற்றது. மீண்டும் இந்த வருடம் தமிழ்நாடு மகளிர் அணி ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது முறையாக தேசிய கால் பந்து சாம்பியன் கோப்பையைத் தமிழ்நாட்டு அணி      கைப்பற்றியுள்ளது.   தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் 2 ஆவது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.ராஜா  வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல கட்சித் தலைவர்கள்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related post

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார…

தென் கொரியாவில் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 எனப் பிரிவுகளில்…
37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி (தென்னாப்பிரிக்கா – இந்தியா) இடையே நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் போட்டி…
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

    இந்தியா மற்றும் நோபாளம்  இரு அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம்(4.9.2023)நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்…