தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான நெல்லை ,குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. மீண்டும் வடகிழக்கு பருவமடையால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் 68 செ.மீ ,நெல்லை 135 செ.மீ ,குமரியில் 103செமீ, தூத்துக்குடியில் 68செ.மீ ,தென்காசியில் 80 செ மீ எனக்கூடுதலாக மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன . இந்தநிலையில் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் பேருந்து மூலம் அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மீண்டும் இரண்டு நாட்கள் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதனால் நெல்லை குமரி தூத்துக்குடி போன்ற வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஹெலிகாப்டர் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் வைகுண்டம் கோவில்பட்டி போன்ற இடங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியுளளது. தென் மாவட்டங்களில் இதுவரை வரலாறு காணாத வரை மழை பதிவாகியுள்ளது . இதன் காரணமாக நெல்லை, குமரி ,தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது