துப்புரவு தொழிலாளர் பணியில் உயிரிழப்பு நேரிட்டால் 30 லட்சம் இழப்பீடு -உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

துப்புரவு தொழிலாளர் பணியில்  உயிரிழப்பு நேரிட்டால் 30 லட்சம் இழப்பீடு -உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்தன் குமார், தலைமை அமர்வு நீதிபதிகளளிடம் துப்புரவு தொழிலாளர்களின் நலன் கருதிய விசாரணை இன்று நடைபெற்றது. இதற்கான தீர்ப்பில் “கழிவு நீர் அகற்றும் போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் லட்சம் இழப்பீடு என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பினைப் பிறப்பித்துள்ளது.

உரிய உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் கழிவு நீரை அகற்றும் போது துப்புரவு தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு நேரிட்டால் 30 லட்சம் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும், மேலும் நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்ட 20 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் ,வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.மேலும் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து இழப்பீட்டுத் தொகையை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையை பிறப்பித்துள்ளது.

Related post