கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவுத்திடலில் உணவுத் திருவிழா செப்டம்பர் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் மக்கள் உடலுக்கு ஏற்ற உணவு வகைகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அதிலும் குறிப்பாக சிறுதானிய வகைகள், பல வகையான நெல் வகைகள் குறித்த பலவகையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சார்ந்த உணவு வகைகள் குறைந்த விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவில் 150 க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறுதானிய உணவுகளுக்கு மட்டும் தனியே பல அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சைவ-அசைவ உணவுகள் உணவு திருவிழாவில் சிறப்பு அம்சமாக உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுத் திருவிழாவானது நடைபெறும். மக்கள் அனைவரும் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு பிடித்த உணவுகளை உண்டு மகிழலாம்.