சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் ஜவுளி கடைகளில் புதிய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். அதேபோல சென்னை தீவுத்திடலில் அமைக்கப் பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்டியது.
புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, பாடி நல்லூர், போரூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றனது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் சென்னை மாநகரம் முழுவதும் மக்கள் ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.