திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை. தமிழ்நாட்டில் மல்டி பிளஸ் திரையரங்குகள் அதிகரித்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரிப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதோடு அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் போன்றவை எம்.ஆர்.பியைத் தாண்டியும் விற்கப்படுகின்றன. எனவே திரையரங்கத்திற்கு 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் விற்கப்படும் திண்பண்டங்களின் விலையைக் குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது தியேட்டர்களின் டிக்கெட் விலை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் ஏசி தியேட்டர்களில் ரூபாய் 150 டிக்கெட் விலை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டும் என்றும், ஏசி இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 150 ஆகவும், மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏசி தியேட்டர்களின் கட்டணம் ரூபாய் 80 என்பதிலிருந்து 120 ஆக உயர்த்த பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.