திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகர் கோயிலில் ஆடி கிருத்திகை விழா!

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் புகழ்பெற்று விளங்குகிறது.இக்கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2024 ஆடி மாத கிருத்திகை விழா ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்கப்படுகிறது . இதைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடிபரணியும், 29ஆம் தேதி திங்கள் கிழமை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப விழா ஆரம்பமாகிறது. ஜூலை 29, 30 ,31ஆம் தேதிகளிலும் தெப்ப விழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.

எனவே திருத்தணி முருகர் கோயிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன் கோயில் இணை ஆணையா் கூடுதல் பொறுப்பு ஆ. அருணாசலம், கோயில் அறங்காவலா்கள் கோ.மோகன், ஜி. உஷாரவி, வி. சுரேஷ்பாபு, மு. நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனா்.

Related post