திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பகுதியில் பூரிவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாட்டம். இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி மாத திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் 6ஆம் தேதி இன்று அம்மன் அழைப்பு, 7ஆம் தேதி செல்லி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது தெருக்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.
பிறகு 8-ஆம் தேதி அம்மனுக்கு மாற்று அலங்காரம் நடைபெற்று, பொதுமக்கள் அனைவரும் அம்மனுக்கு படையல் இடும் விழாவும் நடைபெறுகிறது.இவ்விழாவை பொதுமக்கள் அனைவரும் ஏற்று நடத்துகின்றனர். இந் நிலையில் அந்த கிராமத்தின் பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.