திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. பஞ்சலிங்க அருவியைத் தொடர்ந்து திருமூர்த்தி மலையின் திருமூர்த்தி கோவிலும் அமைந்துள்ளது. இக் கோயிலில் உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தரிசிக்க பல ஆயிரம் கணக்கான பத்தர்கள் வருவர். மேலும் திருமூர்த்தி மலையைச் சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

 இந் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .எனவே சுற்றுலா பயணிகளுக்கு பஞ்சலிங்க அருவியில் குளிக்க மூன்று நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related post