திருத்தணி முருகர் கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா கொண்டாட்டம் !

திருத்தணி முருகர் கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா  கொண்டாட்டம் !

 தமிழகத்தில் உள்ள அனைத்து முருகர் கோயில்களிலும் இன்றைய தினமான ஆனி மாத கிருத்திகை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆனி மாத கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.திருத்தணி முருகர் கோவிலில் இன்று அதிகாலையே 4.30 மணியளவில் சிறப்பு அபிஷேக பூஜைகளுடன்,வைர ஆவணங்களுடன் முருகப்பெருமான் காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார். இதைத்தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் பள்ளியறை பூஜையும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியினை காண்பதற்காக ஆந்திரா ,கேரளா என வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அனைவரும் வருகை தந்து முருகப்பெருமானை அரோகரா! அரோகரா! எனப் பக்தி பரவசத்தோடு வணங்கினார். ஆனி மாத கிருத்திகை தினம் என்பதால் திருத்தணி முருகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியதில் பலத்த போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Related post

திருத்தணி முருகர் கோயிலில் நவம்பர் 14ஆம் தேதி கந்த சஷ்டி  தொடக்க விழா ஆரம்பம் !

திருத்தணி முருகர் கோயிலில் நவம்பர் 14ஆம் தேதி கந்த சஷ்டி தொடக்க…

திருத்தணி முருகர் கோயிலில் வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது. இவ்விழாவின் தொடக்கமாக வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி…