திருத்தணி முருகர் கோயிலில் வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது. இவ்விழாவின் தொடக்கமாக வருகிற நவம்பர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அதிகாலை 5 மணியில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும், தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மூலவர் முருகருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகர் கோயிலில் மூலவருக்கு கந்தசஷ்டி விழாவையொட்டி 14 ஆம் தேதி முருகப்பெருமான் தங்கக் கவசத்திலும், 15 ஆம் தேதி திருவாபரணம், 16ஆம் தேதி வெள்ளி கவசத்திலும் ,17 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிப்பார்.
மேலும் திருத்தணி காவடி மண்டபத்தில் உள்ள சண்முகனுக்கு 18ஆம் தேதி புஷ்பாஞ்சலியும் ,19ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். தமிழ் நாட்டிலுள்ள ஆறுபடை வீடுகளிலும் முருக பெருமான் கந்த சஷ்டி விழா 7 நாட்களாக நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு அனைத்து முருகர் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து முருகரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.