தமிழகத்தில் உள்ள அனைத்து முருகர் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா நவம்பர் 2ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்ற வருகிறது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ஆவது நாளாக ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காவது நாளாக சுவாமி ஜெயந்தி நாதரும், வள்ளி தெய்வானையும் தங்க தேரில் எழுந்தருளி திருவிதி உலாவும் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பங்கேற்று யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி ஜெயந்திநாதரை வழிபட்டனர். கந்த சஷ்டி விழா காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் ஒன்று திரண்டதால் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.