திண்டுக்கல் மாவட்டம் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 2024 தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி பழனியில் தண்டாயுதபாணி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து தைப்பூச திருவிழா பழனி திருக்கோயிலில் 10 நாட்களாக சிறப்பாக நடைபெறும். பழனி முருகர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி முத்துக்குமாரசாமி – வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாணம்,தொடர்ந்து வெள்ளி ரத புறப்பாடும் நடைபெறும்,
25ஆம் தேதி தைப்பூசமும் முருகர், வள்ளி தெய்வானை தேரோட்டமும் நடைபெறும், பிறகு ஜனவரி 27 தேதி முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தெப்ப திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் . தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக வருகை தந்து சுவாமி முருகப்பெருமானை வணங்குவர்.