திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி!

திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி!

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் கோல்டன் ஹோட்டல் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் ,மதுரை மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்த திருநங்கைகள் பங்கேற்றனர். நடை, உடை , முகபாவனை அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த அழகி போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமா முதல் பரிசையும் பெற்று திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டத்தைப் பெற்றார். அதே போல் தேனி மாவட்டத்தில் இரண்டாம் பரிசு ஸ்ருதியும் தேர்வாகப்பட்டரர். அதன் பிறகு இவர்களுக்கான கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related post