தமிழ்ப் புத்தாண்டு நாளில் ‘ருத்ரன்’ படம் ரிலீஸ்

தமிழ்ப் புத்தாண்டு நாளில் ‘ருத்ரன்’ படம் ரிலீஸ்

சென்னை உயர்நீதி மன்றமானது ருத்ரன் திரைப்படத்தின் தடையை நீக்கியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் ,நடிகை பிரியாபவானி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப் படத்தினை கதிரேசன்  இயக்கியுள்ளார். ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  இந்தப் படத்தில் ஹிந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைல் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்சா நிறுவனம் முதலில் பத்து கோடி ரூபாய் செலுத்தி இருந்தது. இன்னிலையில் 4 கோடியே ஐம்பது லட்சம் ஃபைல் ஸ்டார்,ரெவன்சா நிறுவனத்திடம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று கூறி திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் ருத்ரன் படத்தில் தடை விதிக்கப்பட்டது.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் விசாரணைக்கு வந்த போது தடையை நீக்க வேண்டும் எனப் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதை அடுத்து நீதிபதி அவர்கள் நியாயத்தின் அடிப்படையில் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் ருத்ரன் படம் வெளியிட இருந்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. திட்டமிட்டபடியே தமிழ்ப் புத்தாண்டு நாளில் ருத்ரன் படம் ரிலீஸ்.

Related post

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ ஸ்டேட்டஸ் அப்டேட். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர்…