தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் !

தமிழ்நாட்டை சேர்ந்த  பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் !

 தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் இந்திய அளவிலான நீட் தேர்வில் 720/ 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளான்.  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வில் 20 .38 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.  தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். நீட் தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமை ஜூன் 13 அன்று வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவில் நாடு முழுவதும் மொத்தம் 11.40 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன் தேசிய அளவில் 720/ 720 மதிப்பெண்கள் பெற்று  முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளான்.  மேலும் இந்த நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் நான்கு தமிழக மாணவர்கள் இடம் பிடித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்.

Related post

தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர்  நியமனம் !

தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம் !

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர் எஸ். மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பாஸ்கர் பதவி வகித்தார். தற்போது…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில்…

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.…