தமிழ்நாட்டில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ,வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் ‘சிறப்பு மிருக காட்சி சாலை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிரியல் பூங்காவில் 17 வகையினைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 20 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்றவைகளின் நுழைவு கட்டணத்தையும் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் வாழும் வனவிலங்குகளின் பராமரிப்பிற்காகவும் , வருகை தரும் பார்வையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் நுழைவு கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவர்கள் நுழைவு கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ஆக நிர்ணயித்துள்ளது.ரூ .5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ,மாற்றுத்திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.