தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு நிற அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்யும் எனத் தகவல். குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் ,ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1 தேதி முதல் இதுவரை பெய்த மழையின் அளவு 12 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது என்று தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் மிதமான முதல் பரவலான கனமழை பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.