தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆதாரப்பதிவு (பிப்ரவரி 23 ஆம் தேதி) நாளை முதல் துவங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன, இப்பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்போது தமிழக அரசு செய்துவரும் உயர்கல்வி உதவித்தொகை, பல நலத்திட்டங்களுக்காக மாணவர்களின் வங்கி கணக்கை தொடங்க ஆதாரப்பதிவு முக்கியமானதாக ஒன்றாக உள்ளது .
எனவே மாணவர்களின் நலனைக் கருதி அரசு பள்ளிகளில் ஆதார பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நாளைய தினம் துவங்கப்பட உள்ளது .இதற்காக பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.