தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாணவர்களுக்குப்புதிய சீருடைகள், புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி வகுப்புகளை ஆய்வு செய்து பள்ளியை திறக்கும் முன்பு அதன் வளாகத்தில் கட்டிட இடிப்பாடுகளை ,உடைந்த பொருட்களையும் அகற்றி தூய்மைப்படுத்துமாறு பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிப்படைந்த வகுப்பறைகளை மாணவர்கள் செல்லாதவாறு அறைகளைப் பூட்டி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளிகளை சீரமைப்பதற்காக 1கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .