தமிழ்நாட்டின் விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கி மத்திய அரசானது கௌரவித்துள்ளது. போபாலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலிங் எனும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சினை விஞ்ஞான் பாரத் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்து உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது. இதனைக்கண்டு சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீர முத்துவேலை உலகம் முழுவதும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர முத்துவேல் வந்தேபாரத் ரயில் திட்டத்தில் திட்ட இயக்குனராக இருந்ததற்காகவும் ,இஸ்ரோ அறிவியல் ஆராய்ச்சி விண்வெளி துறையில் நுழைந்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டப் பணிகளை மேற்கொண்டு சாதனை நிகழ்த்தியதற்காக விஞ்ஞான் பிரதீபா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது என்பதையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதைப் பெற்று வீர முத்துவேல் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.