தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இன்று ( ஜூன் 30 ) பொறுப்பேற்றார். சென்னை போலீஸ் கமிஷனரான சங்கர் ஜிவால் இன்று (ஜூன்30) தமிழகத்தில் புதிய டி.ஜி.பி ஆக பொறுப்பேற்றார். டி.ஜி.பி காண தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 14 பேர் அடங்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலைக் கொண்டு புதிய டி.ஜி.பியை மாநில அரசு , மத்திய அரசும் ஆலோசனை நடத்தி தமிழக அரசால் சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பிக்காக நியமிக்கப்பட்டார். இன்று ஓய்வு பெறும் சைலேந்திரபாபு சங்கர் ஜிவாலிடம் கோப்பைகளை ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து சங்கர் ஜிவால் பணியாற்றி வந்த கமிஷனர் பதவியை சந்திப் ராய் நியமிக்கப்பட்டார்.
எனவே தமிழகத்தில் (ஜூன் 30) வெள்ளிக்கிழமை இன்று 32ஆவது டி.ஜி.பி ஆக சங்கர் ஜிவால் சென்னை மயிலாப்பூர் அலுவலகத்தில் பதவியேற்றார். சங்கர் ஜிவால் குடியரசுத் தலைவரின் கைகளிலும், தமிழக முதலமைச்சர் கைகளிலும் வாழ்த்து மடல்களைப் பெற்று காவல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர் என்பதைப் பொறுத்து புதிய டி.ஜி.பியைத் தமிழகஅரசு நியமித்துள்ளது.