தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் யூனிட் மூலம் சிறப்பு படை. தமிழ்நாட்டில் முதன் முறையாக ‘ட்ரோன் யூனிட்’ காவல்துறையில் அறிமுகமாகியுள்ளது. அடையாறு பெசன்ட் அவென்யூ அருகே தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் (டிஜிபி)சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று ‘ட்ரோன் போலீஸ் பிரிவு’ திட்டத்தினைத் தொடங்கி வைத்தனர். . . இதைத் தொடர்ந்து தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதன. இந்த ‘ட்ரோன்களில்’ கேமராக்கள் 5 -10 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்க கூடிய திறன் கொண்டதாக தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன்களில் ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் கூட்ட நெரிசலில் அதிகமாக காணப்படும் இடங்களில் குற்றவியல் செயல்களில் ஈடுபடுபவரை விரைந்து வந்து கண்டுபிடிக்க முடியும். ட்ரோன் போலீஸ் பிரிவு இணை ஆணையர் தகவல்களைத் தெரிவித்தார்.மேலும் காவல்துறையே நவீன மயமாக்க வேண்டும் என்பதே நமது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டம் என்றும்.,குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் காவல்துறை மூலம் தமிழ்நாடு காவல்துறை மூலம் ரூபாய் 3.6 கோடி மதிப்பில்’ வானேவி காவல் அலகு’ (DRONE POLICE UNIT) தொடங்கப்பட்டுள்ளது என சைலேந்திரபாபு தெரிவித்தார். மேலும் புதிய தொழில்நுட்பம் கொண்டு குற்றவியல் செயல்களையும், வாகனங்களின் விபத்து குறித்து ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதற்காக காவல்துறை தொடர்ந்து பணியாற்றும் எனத் தெரிவித்தார்.