தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’ என்று நடிகர் விஜய் பேசத் தொடங்கினார். “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம் என்று விஜய் பேசினார். 
இதில் பெண்களின் முன்னேற்றம், பெண்கள் குழந்தைகள், பாதுகாப்பு, எல்லோருக்கும் சமமான கல்வி மற்றும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என மன உருக்கத்தோடு பேசினார். அங்கு வருந்திருந்த ரசிகர்களிடம் தோழா! தோழி !சகோதரி! நண்பா! என்றும் , என்னை வளர்த்து விட்டதே நீங்கள் தான் எனப் பேசி நன்றியினைத் தெரிவித்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில் சந்திப்போம்! என்று கூறி விடை பெற்றார். இந் நிலையில் திரை பிரபலங்கள் அனைவருமே நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
