தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. சில காரணங்களால் மாநாடு மாற்றப்பட்டு அக்டோபர் எட்டாம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொள்கை, சட்டமன்ற தேர்தல் குறித்தும் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐயாயிரம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாநாடு நடத்துவதற்கு, காவல் துறை விதித்த, 31 நிபந்தனைகள் உட்பட்ட பணிகளை, கட்சி நிர்வாகிகள் , உறுப்பினர்கள் செய்து முடித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த அனுமதி கோரி, செப்.21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து விழுப்புர மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த போலீசார் பாதுகாப்புடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
