சென்னை பனையூரில் இன்று தமிழகக்கட்சி கழகத்தின் கட்சிக் கொடியினை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பாடலை விஜய் வெளியிடுகிறார். இந் நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
ஆகஸ்ட் 22 இன்று வியாழக்கிழமை முதல் நாடெங்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் எனத் கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடி வெளியீட்டு விழாவிற்காக நீலங்கரை, கானாத்தூா் காவல் நிலையங்கள் சார்பாக போலீசார் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
