தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி நடிகர் விஜயின் கோட் திரைப்படம் வெளியாக உள்ளதால் அதற்கு முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு சேலம் மாவட்டம், நாலிகால்பட்டி பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
இந் மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
