தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது 71ஆவது பிறந்த நாளான இன்று அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கும் தமிழக முதலமைச்சர் சென்று மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் திமுக கட்சி தலைவர்களான டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி போன்றோரும் அண்ணா கலைஞர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்திய பிரதமர் மோடி ,உலக நாயகன் கமலஹாசன் ,முக்கிய பிரதிநிதிகள், பிரபல ப நடிகர்கள் எனத் தமிழக முதலமைச்சர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.