தமிழக அமைச்சரவை கூட்டம் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 22 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மக்கள் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான நடவடிக்கைகள், விலைவாசி ஏற்றம், ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள், நாடாளுமன்ற தேர்தல் குறித்து சட்டப்பேரவையில் துறைவாரியாக தெரிவிக்கப்பட்ட புதிய திட்டங்களைப் பற்றிய ஆலோசனைகள் குறித்தும் விவாதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.