சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையின் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த அமைச்சரவை கூட்டத்தில் “2021 ஆம் ஆண்டுக்கான டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கான ஒப்புதல்” அளிக்கப்பட்டுள்ளது .மேலும் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்கள் கூடுதலான வேலைவாய்ப்பு பெண்களுக்காக வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் 19 வரையிலான இளம் பெண்களுக்கு கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்தியாலயா திட்டத்தின் கீழ் கல்வியறிவு வழங்கப்பட்டு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் அனைத்து பள்ளி ,கல்லூரிகளிலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெற்றதன் அடிப்படையில் வெளிநாடுகளின் முதலீடுகளின் ஒப்பந்தங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.