தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல். தமிழகத்தில் (ஜூன் 22) இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது எனத் தமிழக அரசாணை என வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் டாஸ்மார்க் கடைகளை மூடப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன. தமிழக சட்டப்பேரவை கூட்டுத் தொடரில் (ஏப்ரல் 12)500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவித்திருந்த அதன்படி தமிழகத்தில் கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் அருகே அமைந்த கடைகள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அமைந்த விற்பனை சில்லறை மதுபானகடைகள் போன்றவற்றை கண்டறியப்பட்டுள்ளன .
எனவே தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்டு 500 டாஸ்மாக் கடைகள் இன்று (ஜூன் 22) மூடப்படுகின்றன. தமிழகத்தில் மண்டல வாரியாக சென்னை 138, கோயம்புத்தூர் 78, மதுரை 125, சேலம் 59, திருச்சி 100 மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் கட்டாயம் மூடப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை உத்தரவிட்டார். இந்த மதுவிலக்கு அரசாணையை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.