தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர் சி ரத்து!

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர் சி ரத்து!

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது .இந் நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம்2019 படி 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ,கார் போன்றவற்றை ஓட்டினால் வாகனத்தின் பதிவு சான்றிதழான ஆர் சி ரத்து செய்யப்படும் என்றும் மேலும் ரூபாய் 25,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு,25 வயது வரை வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

இந்த நடைமுறை ஜூன் ஒன்றாம் தேதி நாளை முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது.18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கும் படி தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related post

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி!

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில்  நிலையங்கள் தொடங்கப்பட்டது.…